குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் ஒன்று திரண்டு கண்டன பொதுக்கூட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென நாடு முழுவதிலும் மிக பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவை பிளவுப்படுத்தும் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல் ஜமா அத்தார்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் , அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கண்டன பொதுக்கூட்டம் திண்டுக்கல் பேகம்பூர் மண்டி பள்ளிவாசல் அருகே நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் மாநகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலவி அப்துல்காதிர் தாவூதி தலைமை தாங்கினார். செயலாளர் மெளலவி பீர் முஹம்மது யூஸீபி கிராஅத் ஓதினார். திண்டுக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் மெளலவி. நெளஷாத் அலி உலவி வரவேற்புரையாற்றினார். இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் முஹம்மது மன்சூர் காஷிபி , திமுக துணை பொதுச்செயலாளர் பெரியசாமி , தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் ஷெரிப் , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முகம்மது யூனஸ் , மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி , முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய , மாநில அரசுகளை கண்டித்தும் உடனே இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோஷங்களை எழுப்பினார்கள். இந்த பொதுக்கூட்டத்திற்கு 5000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ரபீக் அகமது யூசூபி நன்றி கூறினார்.
பேட்டி : அப்துல்கபூர் (அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் மாநில வழிகாட்டுதல் குழு உறுப்பினர்.)
This News Covered From Dindigul District Reporter (Tamil) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or
0 Comments